Newskadai.com
தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…!!

Rain
Share this:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பது அணைவருக்கும் தெரிந்த ஒன்றே, இருப்பினும் சென்னை வானிலை மையமானது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

சென்னை பொறுத்தவரை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசை ஒட்டி பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகளான குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் மூன்றரை மீட்டர் வரை எழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட கொரோனா… இன்றைய நிலை..!!

NEWSKADAI

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: சீலிடப்பட்ட கவரில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்…!!

MANIMARAN M

சினிமா பாணியில் வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் வெட்டிக் கொலை… சொத்துக்காக நடந்த பயங்கரம்..!!

THAVAMANI NATARAJAN

அடப்பாவிகளா: கொரோனாவை மறந்து குஷியாக ‘குளியல்’… ஏற்காட்டில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

சேலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை.. பயணிகள் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN