Newskadai.com
தமிழ்நாடு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: சீலிடப்பட்ட கவரில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்…!!

Share this:

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணிக்ஸ் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. தமிழக அரசு உத்தரவின் பேரில் இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் அனைவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். முக்கிய குற்றவாளியான சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பால் துரை, சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு பலியானார். இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தனது முதல் விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது.

விசாரணை அறிக்கையை படித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம், “சிபிஐ விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், இவ்வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர். போலீசார் தாக்குதலில் இறந்துபோன ஜெயராஜ் மனைவி செல்வராணி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அர்ஜுனன், மக்கள் கண்காணிப்பகத்தின் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோர் தங்களையும் இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க கோரியிருந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Share this:

Related posts

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால்டிக்கெட் தயார்… நாளை மறுதினம் பதிவிறக்கம் செய்யலாம்…!!

THAVAMANI NATARAJAN

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…!!

NEWSKADAI

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN