Newskadai.com
தமிழ்நாடு

மகனுடன் தகராறு: ரயில் முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை…!!

Suicide
Share this:

தொழிலதிபர் ஒருவர் தன் மணைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த தங்கமுத்து வயது 63, இவரது மனைவி ராதாமணி வயது 58. தங்கமுத்து தாராபுரத்தில் சொந்தமாக 2 லாட்ஜும், வணிக வளாகங்களும் வைத்துள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் புதன் கிழமை அன்று உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வந்துள்ளனர். இதனை அடுத்து திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இருவரது சடலம் கிடப்பதாக தகவல் வந்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Sucide

சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பிறகு நடத்திய விசாரணையில் திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே இவர்களது கார் நின்றள்ளதை கண்டுபிடித்துள்ளனர். அதன் மூலம்  திருப்பூர் மாவட்ட தொழிலதிபர் தங்கமுத்து, அவருடைய மனைவியும் தான் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது உறுதிபடுத்தப்படது. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு பிறகே மதன்குமார் என்ற மகன் பிறந்துள்ளார். இதனால் மகனை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் 24 வயதாக கூடிய மதன்குமார் வெளிநாட்டுக்கு சென்று படிக்க போவதாக தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். தங்கமுத்து மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப மறுத்துள்ளார். இதனால் இவர்களிடைய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மகனுடன் ஏற்பட்ட சண்டையால் மனவேதனையில் இருந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Share this:

Related posts

15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி 3வது திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது…!

MANIMARAN M

பிரதமர் திட்டத்திலேயே கை வைப்பீங்களா?… கொதித்தெழுந்த எல்.முருகன்… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

MANIMARAN M

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M

தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு… இன்று சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங்…!!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் நடந்த ‘ஒன்டே ஆக்‌ஷன்’… கதற கதற 37 பிரபல ரவுடிகளை தட்டித்தூக்கிய போலீஸ்…!

AMARA

சேலத்தை கதறவிடும் ‘கொரோனா’… 136 இடங்களில் இன்று மருத்துவ முகாம்…!!

THAVAMANI NATARAJAN