Newskadai.com
தமிழ்நாடு

தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

Share this:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமூர்த்தி ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வந்தார். 19 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்த அவர் கடந்த 30 வருடங்களாக எல்லையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 26ம் தேதி நள்ளிரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திருமூர்த்தி கையில் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தது.

அதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மரணமடைந்தார். தமிழக வீரர் திருமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையடுத்து ஜம்மு – காஷ்மீரில் இருந்து திருமூர்த்தியின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.


Share this:

Related posts

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M

போராட்டத்தை தடுக்க வந்த போலீசாருக்கு கொரோனா… மரண பீதியில் ஊத்தங்கரை மக்கள்…!!

NEWSKADAI

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

மரணத்தில் முடிந்த “பர்த்டே” பார்ட்டி… மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!

MANIMARAN M

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

பற்றி எரிந்த சந்தேக‘தீ’… மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற ‘சைக்கோ’ கணவன்… கதவை உடைத்து காப்பாற்றிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN