Newskadai.com
இந்தியா

பயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…!!

Share this:

கேரளா கோழிக்கோடு விமான நிலையித்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மொத்தம் 191 பயணிகளை தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்  போது கனமழையால் சறுக்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 35 அடி ஆழத்தில் விழுந்து இரண்டு துண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

மீட்பு படையினரால் தற்போது 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். மேலும் மீட்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக டெல்லி மற்றும் மும்பையில் இருந்து மீட்ப்புக்குழுக்களை அனுப்பியுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இந்தியாவையே உலுக்கிய இந்த கோர விபத்து குறித்து விசாரிப்பதற்காக விமான போக்குவரத்து அமைச்சரகம், விமான கோக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விசாரணை அதிகாரிகள் கோழிக்கோடு விரைந்துள்ளனர்.

விமான விபத்து குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்த  பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். விமானத்தில் பயணிந்தவர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

நேற்று இரவு முதலே நடைபெற்று வரும் மீட்பு பணியின் தொடர்ச்சியாக இன்று விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியில் டிஜிட்டல் தகவல் பதிவு சாதனம் மற்றும் விமானியின் குரல் பதிவு சானம் ஆகியவை இருக்கும் என்பதால், விமானம் எவ்வளவு தூரத்தில் இருந்தது, அதன் வேகம், விமானிகளுக்கிடையிலான உரையாடல்கள் ஆகியன அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


Share this:

Related posts

தமிழகத்திற்கு கைக்கொடுக்கும் நெதர்லாந்து – கண்டெய்னரில் இறக்குமதியாகும் ஆக்சிஜன்

MANIMARAN M

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

MANIMARAN M

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

தீராத செல்ஃபி மோகம்… சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ…!

NEWSKADAI

மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் – ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்

AFRIN

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M