Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

Asteroid
Share this:

கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் மக்கள் லட்சக்கணக்கில் மரணித்து வருகின்றனர். இது எல்லாம் போதாது என்பது போல் ராட்சத விண்கல் ஒன்று வேகமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை விட பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

6.8 மில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை நோக்கி மணிக்கு 38,620 கிலோ மீட்டர் வேகத்தில் விண்கல் வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாசாவின் கணிப்பின் படி அந்த விண்கள் 53 மீட்டர் (174 அடி) முதல் 120 மீட்டர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. “2020 கியூஎல் 2” என பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல் விநாடிக்கு 10.5 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த விண்கல் வந்துகொண்டிருக்கிறது.

Asteroid

விண்கல் பூமிக்கு மிக அருகாமையில் இருப்பதால் அபாயகரமானதாக கருதப்பட்டாலும், அது பூமியை தாக்கும் வாய்ப்பு இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி அன்று விண்கல் பூமியை கடந்து செல்லும் என்றும், அதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

தன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும், நம்பிக்கை துரோகம் என இன்றைய ராசிபலன்கள்

NEWSKADAI

2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…!

AMARA

துர்க்கை அம்மனை வழிபடுங்கள், மாற்றங்களை விரும்புவீர்கள், இன்றைய அதிஷ்டமான எண் இதுதான்…

THAVAMANI NATARAJAN