Newskadai.com
கேலரி

எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி… மகன் எஸ்.பி.பி. சரணிடம் ஆறுதல்…!!

Share this:

 

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி கவலைக்கிடமானது. மருத்துவக்குழுவின் கண்காணிப்பு மற்றும் உயிர் காக்கும் கருவிகளின் சிகிச்சையால் எஸ்.பி.பி மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார்.

 

கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

 

நேற்று மாலை 4 மணியிலிருந்து எஸ்.பி.பி உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

இதையடுத்து இன்று எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

பண்னை வீட்டிலும் ஆயிரக்கணக்கான மக்கள், பாரதிராஜா, அமீர், தேவி ஸ்ரீபிரசாத், மனோ உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு மகன் எஸ்.பி.பி.சரண் புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓத இறுதிச்சடங்குகளை செய்தார்.

 

கடைசி நேரத்தில் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினர்.

 

அரசு மரியாதையுடன் உடலை தகனம் செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மாஸ்க் அணிந்த படி நடிகர் விஜய் பண்ணை வீட்டிற்கு வந்தார்.

 

எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய், எஸ்.பி.பி. சரண் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

 

பின்னர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  


Share this:

Related posts

புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா?… சின்னத்திரை கவர்ச்சி புயல் ஷிவானியின் அதிரடி போட்டோஸ்…!!

NEWSKADAI

அயோத்தியில் பிரதமர் மோடி… காண கிடைக்காத அரிய புகைப்படங்கள்…!!

AMARA

ஒரு வழியா “பாகுபலி” வில்லனுக்கு கெட்டிமேளம் கொட்டியாச்சு… அட்டகாசமான கல்யாண போட்டோஸ் இதோ….!!

AMARA

என்ன கொடும கொரோனா இது…!! தமிழகத்தில் இப்படி கொடூரம் காட்டுது… நாகை, கோவை, சேலம், மதுரையின் நிலை…!!

NEWSKADAI

இந்தியாவில் இப்படியும் சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்… கொரோனாவுக்கே டப் கொடுக்கும் சூப்பர் ஹீரோக்கள்…!!

THAVAMANI NATARAJAN

மாற்றமே இல்லாமல்… மனித சமூகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா…!! இன்றைய நிலை..!!

NEWSKADAI