Newskadai.com
சினிமா

“நாளைய முதல்வரே”… விஜய்யை மீண்டும் எம்.ஜி.ஆர். உடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு…!!

Vijay
Share this:

மதுரை தான் போஸ்டர் கலாச்சாரத்திற்கு பெயர் போனது. விதவிதமான கெட்டப்புகளில், அசத்தலான வசனங்களுடன் தங்களுக்கு பிடித்த அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்களுக்கு போஸ்டர் ஒட்டுவார்கள். தற்போது அந்த கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், தளபதி விஜய்யையும் அரசியலுக்கு வரும் படி அறைக்கூவல் விடுத்து பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

vijay

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அன்று தளபதி விஜய், சங்கீதாவின் திருமண நாள் கொண்டாடப்பட்டது. அன்று மதுரையில் எம்.ஜி.ஆராக விஜய்யையும், ஜெயலலிதாவாக சங்கீதாவையும் சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை கிளப்பியது. அந்த போஸ்டர் விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கல் கூட கருத்து கூறினர். இந்த சர்ச்சைக்குப் பிறகும் மீண்டும் படகோட்டி எம்.ஜி.ஆர். கெட்டப்பில், அரசியல் வசனத்துடன் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினர்.

தற்போது 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விழுப்புரத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். படத்திற்கு முன்பு அவரைப் போலவே விஜய் கை அசைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் மக்கள் நலன் காக்க… மாணவர்களின் குறை தீர்க்க… தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கே கிடைத்திட… நாடே எதிர்பாக்கும் … நாளைய முதல்வரே… என்ற வாசங்கள் இடம் பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் செய்யும் போஸ்டர் அட்ராசிட்டியால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கடுப்பில் உள்ளனர்.


Share this:

Related posts

அடுத்த அதிர்ச்சி… கொரோனாவால் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M

இங்கு தான் நிரந்தர நித்திரை கொள்ளப்போகிறார் எஸ்.பி.பி… நாளை இறுதிச்சடங்கு… பண்ணை வீட்டின் புகைப்படம் இதோ…!

AMARA

“லவ் யூ தலைவா”… விஜய் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை… உருக்கமான கடைசி பதிவு…!!

THAVAMANI NATARAJAN

எஸ்.பி.பி-யின் தற்போதைய உடல் நிலை என்ன?… மகன் எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட வீடியோ…!

AMARA

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பில்லையா? … ஆபாச போஸ்டருக்கு எப்படி அய்யா அனுமதி கொடுத்தீங்க…!

NEWSKADAI