லாக்டவுன் நேரத்தில் பல சவால்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. திரைப்பிரபலங்கள் இடையே பல்வேறு சவால்கள் வைரலாகி வந்த நிலையில், தற்போது கிரீன் இந்தியா சேலஞ்ச் வைரலாகி வருகிறது.தெலுங்கு திரையுலகில் பிரபலங்கள் பலரும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி வருகின்றனர். முதலில் மாமனார் நாகார்ஜூனா விடுத்த சவாலை ஏற்ற சமந்தா தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அதன் பின்னர் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோரை இந்த சவாலில் பங்கெடுக்க அழைத்தார். அதில் ராஷ்மிகா மட்டும் வெற்றிகரமாக அந்த சவாலை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். அத்துடன் #GreenIndiaChallenge-ல் பங்கேற்ற மகேஷ் பாபு தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.
இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர்., தளபதி விஜய், ஸ்ருதி ஹாசன் ஆகியோருக்கு சவால் விட்டிருந்தார். இந்த சவாலை தளபதி ஏற்பாரா? என்று தமிழக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற தளபதி விஜய், தனது வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைக்கும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இது உங்களுக்கு மகேஷ் பாபு. பசுமை இந்தியா மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க எனது வாழ்த்துக்கள். நன்றி. பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் கொடுத்துள்ள மகேஷ் பாபு, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதற்கு நன்றி சகோதரா. பாதுகாப்பாக இருங்கள் என நன்றி தெரிவித்துள்ளார்.
லாக்டவுன் நேரத்தில் தளபதி விஜய்யின் “மாஸ்டர்” பட அப்டேட்டும் கிடைக்காமல் அவருடைய முகத்தையும் பார்க்க முடியாமல் திண்டாடி வந்த ரசிகர்களுக்கு இந்த போட்டோஸ் செம்ம விருந்தாக அமைந்துள்ளது.
மேலும் விஜய்யின் இந்த செயலை வேற லெவலுக்கு கொண்டாடி வரும் தளபதி ரசிகர்கள் #Thalapathy என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.