Newskadai.com
சினிமா

#BREAKING “என் மீது உண்மையான அன்பிருந்தால்”… ரசிகர்களுக்கு தல அஜித் விடுத்த கட்டளை…!

Ajith
Share this:

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் செய்யாத செயல்கள் இல்லை. ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவதில் ஆரம்பித்து, சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்வது வரை பல சேட்டைகளில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமின்றி பிரச்சாரத்தின் போது முதல்வர் பழனிசாமியிடம் அப்டேட் கேட்பது, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் எங்கே என கூச்சலிடுவது என பிறரை முகம் சுளிக்க வைக்கும் பல செயல்களை செய்து வந்தனர்.

நேற்று அனைத்திற்கும் உச்சமாக சென்னை வந்த பாரத பிரதமர் மோடியின் வாகன சென்று கொண்டிருந்த போது, அவரிடமும் வலிமை அப்டேட் கேட்பது போல் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இது கடும் விமர்சனங்களை உருவாக்கிய நிலையில், தல அஜித்தே தங்களுடைய ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Ajith

என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுறை செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.

உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

“நான் எந்த படத்தில் நடிக்கனுன்னு எனக்கு தெரியும்”… ‘800’ படத்திலிருந்து விலக மாட்டேன் என விஜய் சேதுபதி திட்டவட்டம்…!

NEWSKADAI

அபாய கட்டத்தில் எஸ்.பி.பி… தீவிர ஆலோசனையில் மருத்துவர்கள்… தற்போதைய நிலவரம் என்ன?

AMARA

துளியும் ஆடையின்றி… கடற்கரை மணலில் படுமோசமாக போஸ் கொடுத்த ‘பிக்பாஸ்’ ஜூலி…!

AMARA

பாடும் நிலாவிற்கு “பத்ம விபூஷன்” விருது… மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத எஸ்.பி.பி…!

AMARA

இந்த கட்டணங்களை எல்லாம் செலுத்த முடியாது… தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிராக கொதித்தெழுந்த டி.ஆர்….!

NEWSKADAI