Newskadai.com
சினிமா

லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!

Ajith
Share this:

“விஸ்வாசம்” பட வெற்றிக்குப் பிறகு தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். வெற்றி படமாக மட்டும் அமையாமல் அஜித் கேரியரிலேயே முக்கியமான இடத்தை பெற்ற திரைப்படம் என்ற பெயரை பெற்றது “நேர்கொண்ட பார்வை” திரைப்படம். இந்தியில் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதுமட்டுமின்றி அஜித் மீது பெண் ரசிகைகள் வைத்திருந்த மரியாதையும் வேற லெவலுக்கு உயர்ந்தது.

மேலும் படிக்க: http://சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

அதனால் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “வலிமை” படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. லாக்டவுனுக்குப் பிறகு படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை எடுக்க படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: http://“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். தற்போது லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் இருக்கும் அஜித், உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறிவிட்டதாக புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. போலீஸ் அதிகாரி வேடம் என்பதால் செம்ம கெத்தாக அஜித் மாறியுள்ளதாக ரசிகர்கள் குஷியில் உள்ளனர். ஆனால் சிலரோ அந்த புகைப்படம் வலிமை படத்திற்காக உடல் எடையை குறைத்த அஜித்தின் படம் இல்லை என்றும், விவேகம் படத்தின் போது எடுக்கப்பட்டது என்றும் கூறி வருகின்றனர்.இதோ அந்த வைரல் போட்டோ….


Share this:

Related posts

3 ரசிகர்களின் உயிரை காவு வாங்கிய பிரபல நடிகரின் பேனர்… பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்…!

NEWSKADAI

வைரல் பாட்டியை வலை வீசி தேடும் வில்லன் நடிகர்… மாஸ்டர் பிளானுடன் வெயிட்டிங்…!

NEWSKADAI

கமல் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய சீமான்… என்ன இப்படி சொல்லிட்டாரு…!!

NEWSKADAI

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

இதோ… வெளியானது பிக்பாஸ் சீசன் 4 2nd புரோமோ.. இந்த முறை பேசியிருக்குறது கமல் இல்ல…!!

AMARA

கல்லீரல் பிரச்சனையால் பிரபல இயக்குநர் மரணம்… கண்ணீரில் தத்தளிக்கும் திரைத்துறையினர்…!!

AMARA