Newskadai.com
சினிமா

அஜித்துக்கு மட்டும் ஓல்டு கெட்டப்பா?… “வக்கீல் சாப்” மோஷன் போஸ்டரை பார்த்து கொந்தளிக்கும் தல ஃபேன்ஸ்…!

Share this:

இந்தியில் 2016ம் ஆண்டு அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பெண் சுதந்திரம் பற்றி தெளிவாக எடுத்துரைந்த இந்த படத்தை மீடியாக்கள் கொண்டாடின. அமிதாப் பச்சன், டாப்ஸி-யின் நடிப்பு இந்த படத்தில் வேற லெவலுக்கு வெளியானது. இந்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டது.

தல அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், பிக்பாஸ் அபிராமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிங்க் படத்தில் எப்படி அமிதாப் பச்சன் வயதான தோற்றத்தில் நடித்தாரோ? அதேபோல், அஜித்தும் நேர்கொண்ட பார்வையில் ஓல்டு கெட்டப்பில் தான் நடித்தார். பிளாஸ் பேக் போர்ஷனில் கூட அவருடைய ரசிகர்களின் பேவரைட் ஆன சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் தோன்றினார். தனது வயதை மறைக்க விரும்பாத தல அஜித், மற்ற நடிகர்களைப் போல் தோற்றத்தையும் மறைக்காமல் ஒளிவு மறைவின்றி நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் செம்ம யங் லுக்கில் ஒரு கையில் பேஸ் பால் பேட்டும், மறுகையில் குற்றவியல் சட்டப்புத்தகத்தையும் கையில் பிடித்தபடி மாஸாக தோன்றுகிறார் பவன் கல்யாண். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த மோஷன் போஸ்டரை பார்த்து தெலுங்கு ரசிகர்கள் குஷியில் குத்தாட்டம் போடும், அதேவேலையில் தல ஃபேன்ஸ் செம்ம கடுப்பில் உள்ளனர்.

நேர்கொண்ட பார்வையில் எங்க தல-க்கு மட்டும் வயசான கெட்டப்பை போட்டு விட்டு, தெலுங்கு ஸ்டாருக்கு மட்டும் இளமையான தோற்றத்தை கொடுத்து மாஸ் காட்டுறீங்களா? என போனி கபூர் மீதும் கடுப்பில் உள்ளார்களாம். ஏற்கனவே எத்தனை முறை கேட்டாலும் வலிமை பற்றி எந்த அப்டேட்டும் தர மாட்டேங்குறாரே என போனி கபூர் மீது கடுப்பில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு அவரை வெளுத்து வாங்க நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.


Share this:

Related posts

கமல் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய சீமான்… என்ன இப்படி சொல்லிட்டாரு…!!

NEWSKADAI

#Doctor நெட்டிசன்களிடம் சிக்கிய அனிருத்… செல்லம்மா பாடல் இந்த பாடலின் காப்பியா? #SK| #newskadai

NEWSKADAI

கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!

AMARA

இதுவா ரஜினியின் “அண்ணாத்த” பட கதை?…. செம்ம கேவலமா இருக்கே என தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்…!!

NEWSKADAI

“தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்”… ரசிகர்களை அடக்க சாட்டையை சுழட்டும் ரஜினி…!!

AMARA

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN