Newskadai.com
சினிமா

வலிமை ஷூட்டிங்கில் அஜித்திற்கு மீண்டும் காயம்… ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி…!

Share this:

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித்துடன் இயக்குநர் ஹெச். வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை. உலகையே ஆட்டிபடைத்த கொரோனா தொற்று காரணமாக வலிமை படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த 7 மாதங்களுக்கு பிறகு தற்போது திரையுலகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இதையடுத்து கடந்த மாதம் வலிமை படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. அதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்றது. அதில் அக்டோபர் 25ம் தேதி தல அஜித் பங்கேற்றார். எங் அண்ட் ஃபிட் லுக்கில் கண்ணாடி அணிந்த படி ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட தல அஜித்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. கடந்த 15ம் தேதி ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஷெட்டியூல் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

Ajith

அது என்ன ஒரு மாதத்திற்கு ஷூட்டிங்கை தள்ளிவச்சிட்டாங்க என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சமீபத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கில் ஆக்‌ஷன் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் ஸ்டேண்ட் காட்சியில் டூப் இல்லாமல் நடித்த தல அஜித்திற்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஐதராபாத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில் அஜித் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன். இதனால் தல ரசிகர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.


Share this:

Related posts

காதலரை திருமணம் செய்தார் காஜல் அகர்வால்… அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

NEWSKADAI

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய்… மகள் ஆராத்யாவும் நலம்…!!

NEWSKADAI

#BREAKING நடிகை அமலா பால் 2வது திருமண சர்ச்சை… அவதூறு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

AMARA

“வீடு திரும்ப ரெடியான எஸ்.பி.பி”…. மகன் சொன்ன தகவலால் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…!

AMARA

புற்றுநோயால் உருகுலைந்து போன சிவகார்த்திகேயன் பட நடிகர்… சிகிச்சைக்கு உதவி கேட்டு மன்றாடும் பரிதாபம்…!

AMARA

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M