Newskadai.com
தமிழ்நாடு

ஏழைகளின் நண்பன் 10 ரூபாய் டாக்டர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விரட்டி வந்த எமன்!!

Share this:

சென்னை வில்லிவாக்கத்தில் பிரபலமான 10 ரூபாய் டாக்டர் சி மோகன் ரெட்டி தனது 84 வயதில் சுவாசப் பிரச்சனை காரணமாக மரணமடைந்தார். 1936ல் நெல்லூரில் பிறந்த மோகன் ரெட்டி, தனது மருத்துவ படிப்பை சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பயின்றுப் பெற்றார். ரயில்வேயில் மருத்துவராக சிறிது காலம் பணியாற்றிய அவர் பின்னர், ஏழை எளியவர்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் வில்லிவாக்கத்தில் முப்பது படுக்கை வசதிகள் கொண்ட மோகன் நர்சிங் ஹோம் என்ற பெயரில் மருத்துவமனையை தொடங்கினார். திருமணம் செய்துக் கொள்ளாமல் பிரம்மசாரியராகவே தனது வாழ்வை தொடர்ந்தார்.

Mohan Reddy

தன்னிடம் வரும் நோயாளிகளிடமிருந்து மருத்துவ ஆலோசனைக்காக ரூபாய் 10 மட்டுமே பெற்றார். எந்த நேரமும் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து அப்பகுதி மக்களிடையே 10 ரூபாய் டாக்டர் என்று மிகுந்த அன்புக்குரியவரானார். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பல வெளிநோயாளிகளுக்கு தன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார்.

அவருடைய சகோதரர் டாக்டர் சி.எம்.கே ரெட்டி கூறும்பொழுது, “நாங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுடன் தங்கச் சொன்னோம், ஆனால் அவரோ, நான் உங்களுடன் வந்துவிட்டால், அங்கு வரும் நோயாளிகளுக்கு யார் மருத்துவம் பார்ப்பது, என்று வர மறுத்து விட்டார். அவர் எங்களது தாயைப் போல குணம்படைத்தவர், எங்கள் தாயார்கூட ஏழைகளுக்காகவே வாழ்ந்தார். அவரது முதுமை காலத்தில்கூட அவர் ஏன் மற்றவர்களுக்கு உதவ இவ்வளவு சிரமப்படுகிறார் என்று நான் என் தாயாரிடம் கேட்பேன். மற்றவர்களுக்கு உதவ முடியாவிட்டால் நாம் வாழ்ந்து என்ன பயன்? என்று என்னிடம் கூறுவார்கள். என் சகோதரர் எங்களது தாயைப் போலவே அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்ந்தவர்’ என்று கூறினார்.

அவரது மருத்துவமனை செவிலியர் ஒருவர் டாக்டர் ரெட்டி பற்றி கூறும்பொழுது, “இங்கு வரும் நோயாளிகள் தங்களுக்கு மருத்துவ செலவு செய்ய போதிய வசதியில்லாமல் இருந்தால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிப்பார்” என்று கூறினார். டாக்டர் சி.மோகன் ரெட்டியின் பரோபகார சேவைகளுக்காக, அப்போதைய தமிழக ஆளுநர் கே ரோசயா பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது. டாக்டர் சி.மோகன் ரெட்டி, தனது பிறந்தநாளான ஜூன் 23 அன்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல ஏழைகளுக்கு உணவு வழங்கினார்.

டாக்டர் ரெட்டி ஜூன் 25 அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தவர், கடந்த புதன்கிழமை காலை சுவாசக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். மருத்துவர் ரெட்டியின் மரணச் செய்தி வில்லிவாக்கம் மற்றும் சுற்றுப்புற மக்களிடையேயும், அவரிடம் மருத்துவம் பார்த்து வந்த ஏழை எளிய மக்களிடையேயும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

பேருந்து நிலையத்தில் பட்ட பகலில் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்ட ஓட்டுனர்கள்… திருச்சியில் நடந்தேறிய விபரீதம்…

MANIMARAN M

மூணாறு நிலச்சரிவு: தமிழக குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

NEWSKADAI

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

தஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…

THAVAMANI NATARAJAN

‘கர்ணன்’ பட பாணியில் காவல்துறை அட்டூழியம்… இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்…!

NEWSKADAI

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… விரைவில் நல்ல முடிவு …!!

THAVAMANI NATARAJAN