Newskadai.com
தமிழ்நாடு

நோயாளிகளுக்கு கோயில் அன்னதானம்… அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு…!

Temple Food covid
Share this:

கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அன்னதான நடைபெறும் திருக்கோயில்களிலிருந்து நாள்தோறும் உணவுப்பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, திருக்கோயில்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் தேவைப்படும் நபர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்துறைப்பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் நலனைக்கருத்தில் கொண்டும், தொற்றுநோய்ப்பரவாமல் தடுக்கும் பொருட்டும், கீழ்கண்ட அறிவுரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முகவரியில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. திருக்கோயில்களில் தயார் நிலையில் உள்ள உணவுப்பொட்டலங்களை திருக்கோயில்களிலிருந்து பெற்று மருத்துவமனைகளில் விநியோகம் செய்யு இணை ஆணையர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரை நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப்பெற்று அதன்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Temple Food covid

2. அன்னதானம் தயார் செய்யும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உணவுப்பொட்டலங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் இத்துறைப்பணியாளர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினியுடன் PPT KIT வழங்கப்பட்டு அதனை உபயோகிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3. முதுநிலை திருக்கோயில்களில் அந்தந்த செயல் அலுவலர்களும், இதர திருக்கோயில்களில் மண்டல இணை ஆணையர்களும் மேற்காணும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், இச்சுற்றறிக்கை பெற்றுக்கொண்டமைக்கு அத்தாட்சி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

MANIMARAN M

குஷ்புவுக்கு போட்டியாக மோடி… சேலத்தில் தூள் பறக்கும் போஸ்டர்கள்…!

MANIMARAN M

ஆகஸ்ட் 17 முதல் அனைவருக்கும் இ-பாஸ்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…!!

AMARA

ஜூன் 14வரை எவற்றுக்கெல்லாம் தடை நீடிக்கும்… தமிழக அரசின் அறிவிப்பு இதோ…!

NEWSKADAI

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

MANIMARAN M

கொரோனா மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

AMARA