Newskadai.com
சினிமா

நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டிய டிக்-டாக் காதலன்… தூக்கில் தொங்கிய சீரியல் நடிகை…!!

Sravani Serial actor
Share this:

கடந்த சில மாதங்களாக சினிமா மற்றும் டிவி துறையில் இருக்கும் பிரபலங்கள் தற்கொலை நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது, இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்க்கான விசாரனை நடந்து வரும் நிலையில் தற்பொழுது தெலுங்கு சீரியல் நடிகை ஸ்ரவாணி தற்கொலை செய்து கொண்டிருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Sravani Serial actor
மனசு மமதா, மொளனராகம் போன்ற தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் ஸ்ரவாணி. தெலுங்கு தொலைக்காட்சியில் கடந்த 8 வருடங்களாக ஸ்ரவாணி கொண்டப்பல்லி நடித்து வந்துள்ளார், இந்த நிலையில் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் தகவல் வெளியானது. இந்த தகவல் தெலுங்கு சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
Sravani Serial actor
ஆந்திராவின் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தான் இந்த தற்கொலைக்கு காரணமாக புகார் அளித்துள்ளனர். ஸ்ரவாணியும், தேவ்ராஜூம் டிக்டாக்கில் அறிமுகமாகி பின் சந்தித்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் மிக நெருக்கமாக பழகிய ஸ்ரவாணிவை சில மாதங்களாக தேவராஜ் தன்னுடன் எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளதால் தான் ஸ்ரவாணி தற்கொலை செய்து கொண்டார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Share this:

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சக நடிகையால் கதறி அழுத முல்லை… வைரலாகும் வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

“சீக்கிரமா எழுந்து வா”… பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!

AMARA

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

NEWSKADAI

விஷால் அன் கோ-வை அலறவிட்ட பாரதிராஜா… ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!!

AMARA