Newskadai.com
சினிமா

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… திரையுலகை அடுத்தடுத்து தாக்கும் அதிர்ச்சி

Share this:

கொரோனா காலம் திரைத்துறையினருக்கு அடுத்தடுத்து பல சோகங்களையும், அதிர்ச்சியையும் கொடுத்து வருகிறது. லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாமல் வருவாய் இழப்பு, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் நடிகர், நடிகைகள் தற்கொலை ஒருபுறமும், கொரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் பிரபலங்கள் மறுபுறமும் என தினந்தோறும் கெட்ட செய்திகளைக் கேட்டு ரசிகர்கள் சோர்ந்து போய்விட்டனர். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்த ஜெயபிரகாஷ் ரெட்டியின் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

‘பிரம்மபுத்ரூடு’ என்ற படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமாகி, சமரசீமா ரெட்டி படத்தின் மூலமாக பிரபலமானவர், நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்தார், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு டாப் ஸ்டார்களுக்கு மட்டுமல்லாது, அவருடைய மகன்களுடனும் தலைமுறை கடந்து நடித்தவர். தமிழில் உத்தமபுத்திரன், ஆறு போன்ற படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

jay prakash reddy

ஜெய பிரகாஷ் ரெட்டி ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர், 74 வயதான இவர் நேற்று காலை ஆந்திராவிலுள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானர். இவர் காலமான செய்தியறிந்த தெலுங்கு சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சினிமாத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை  சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.


Share this:

Related posts

3 ரசிகர்களின் உயிரை காவு வாங்கிய பிரபல நடிகரின் பேனர்… பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்…!

NEWSKADAI

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M

சூர்யாவின் முரட்டு ரொமான்ஸ்… தாறுமாறு வைரலாகும் “காட்டு பயலே” லிரிக் வீடியோ…!!

NEWSKADAI

விஷால் அன் கோ-வை அலறவிட்ட பாரதிராஜா… ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!!

AMARA

மாட்டிவிட்ட வாட்ஸ் அப்… போதைப்பொருள் விவகாரத்தில் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகானுக்கு சம்மன்…!!

AMARA

திரையரங்குகள் திறக்கபடுமா..? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்…

MANIMARAN M