Newskadai.com
இந்தியா

இந்தியாவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்… அரசு அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்…!!

Share this:

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா பகுதியில் கால்வாய் விரிவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கால்வாய் விரிவாக்கும் பணிகளுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தெலுங்கானா மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் ரெட்டிக்கு சொத்தமான நிலத்தில் குறிப்பிட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கால்வாய் விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்காக பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களுடன் இன்ஜினியர்கள், அதிகாரிகள் ஆகியோர் சென்றிருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் மோகன் ரெட்டி தன்னிடம் இருக்கும் ரிவால் துப்பாக்கியை காண்பித்து அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்தகாரர், இன்ஜினியர்கள், அதிகாரிகள் ஆகியோர் பணிகளை நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தெலுங்கானா மாநில நீர்ப்பாசனத்  துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் முன்னாள் அமைச்சர் மோகன் ரெட்டி மீது போலீசார் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழங்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Share this:

Related posts

கொரோனா நேரத்தில் கோலாகலமாக நடக்கப்போகும் அயோத்தி பூமி பூஜை…!

NEWSKADAI

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

என்னதான் உங்க பிரச்சனை…??? மத்திய அரசை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

POONKUZHALI

இப்படியே போனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது… எச்சரிக்கும் வைகோ…!

NEWSKADAI

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

AMARA