Newskadai.com
அரசியல்

போடி போஸ்டர் விவகாரம்… சத்தமில்லாமல் ஓ.பி.எஸ். போட்ட அதிரடி உத்தரவு…!!

CM
Share this:

கட்சியிலும், ஆட்சியிலும் இரு தலைமை இருந்தாலும் அதிமுகவில் எவ்வித சலசலப்பும் இல்லாமல் அமைதியாக போய்க்கொண்டிருந்தது. இடையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்ல, அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவகாரத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மாறி, மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

எங்கே மீண்டும் தர்ம யுத்தம் வெடித்துவிடுமோ என்ற அசத்தில் ரத்தத்தின் ரத்தங்கள் துடித்துக்கொண்டிருந்த சமயத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். எம்.ஜி.ஆரின் பாடலை சுட்டிக்காட்டி, தாய்வழி வந்த… தங்கங்கள் எல்லாம் … ஓர்வழி நின்று… நேர்வழி சென்றால்.. நாளை நமதே! என்ற வரிகள் அதிகமுகவில் ஏற்பட்ட சலசலப்பை சற்றே அடங்கியது.

CM

இந்நிலையில், தேனியில் ஓபிஎஸுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ். சொந்த தொகுதியான தேனி முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்ற ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் தான், தமிழக நிரந்தர முதல்வர் என்று போஸ்டர்கள் ஒ ட்டியுள்ளனர். பெரியகுளத்தில் உள்ள தென்கரை ஓ.பி.எஸ் இல்லம் அருகிலும் இதே போல் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இதனால் அதிமுகவில் பெரும் சர்ச்சை வெடித்தது.

OPS

இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, காமராஜ், விஜயபாஸ்கர் ஆகிய 10 அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அங்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, பெரியகுளத்தில் உள்ள தென்கரை ஓ.பி.எஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. 2021ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு என கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் நேரடி உத்தரவின் பேரிலேயே போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்??? முடிவு செய்யக் கூடும் காரியக் கமிட்டி…

MANIMARAN M

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?… முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை…!!

AMARA

சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் எம்.எல்.ஏ.வை பொறுப்பிலிருத்து தூக்கியடித்த அதிமுக தலைமை…!!

NEWSKADAI

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

எம்.பி.கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி… வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்…!!

AMARA

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA