Newskadai.com
லைஃப் ஸ்டைல்

16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

Teacher Mini Korman
Share this:

கொரொனா தொற்று நோயால் கடந்த ஆறு மாத காலமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. இருப்பினும் இணைய வசதி இல்லாத பல கிராம மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டாக் கனியாகவே இருக்கின்றது.

Teacher Mini Korman

இந்நிலையில் போக்குவரத்து வசதி இல்லாத விலங்குகள் நிறைந்த காடு வழியாக மலையேறி 16 கி.மீ நடந்தே சென்று பழங்குடி கிராமத்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறார் ஒரு ஆசிரியை. கேரள மாநிலத்தில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் சுமார் 270 உள்ளன. இதில் மலப்புரம் மாவட்டம் அகம்படத்தில் வசிக்கும் 44 வயதான மினி கோர்மன் என்ற ஆசிரியையும் ஒருவர்.

Teacher Mini Korman

இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக அகம்படத்தில் (மலப்புரம்) இருந்து சுமார் 16 கி.மீ தூரம் நடந்து, காட்டுப்பன்றிகள், புலிகள் மற்றும் யானைகள் நிறைந்த ஒரு வழுக்கும் வனப்பாதை வழியாக மற்றொரு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கிறார். பின்னர் ஒரு மூங்கில் பாலத்தின் துணையுடன் ஒரு நதியை கடந்து பழங்குடி கிராமமான அம்புமாலாவுக்கு சென்றடைகிறார்.

Teacher Mini Korman

இது குறித்து மினி கோர்மன் கூறுகையில், என்னுடைய பள்ளி, கல்லூரி படிப்புகளுக்காக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டதால் தற்போது இந்த தூரம் எனக்கு பெரிதாக தெரிவதில்லை என்றும், அம்புமாலா பள்ளிக்கு செல்லும் போது ஒரு முறை புலி குட்டிகளை கண்டேன், முதலில் அது பூனைக் குட்டிகள் என்று நினைத்தேன், பின்னர்தான் அது புலி குட்டிகள் என்று தெரிந்தது.

Teacher Mini Korman

நான் போகும் பாதை புலிகள் மற்றும் யானைகள் நிறைந்தது. பலமுறை மலைப்பாம்பு, காட்டுப்பன்றி போன்றவைகளை பார்த்திருக்கிறேன். நதியில் நீர்பெருக்கு ஏற்படும் பொழுது சில சமயம் அம்புமாலாவிலேயே தங்க வேண்டியிருக்கும் என்று கூறினார். மினி கோர்மன் 1993 இல் பயிற்சி பெற்ற ஆசிரியர் சான்றிதழ் (டி.டி.சி) பெற்றார். இருப்பினும் பல ஆண்டுகளாக அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

Teacher Mini Korman

பின்னர் அவர் 1999 இல் மஞ்சேரி நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்தார், அதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் மலப்புரத்தில் வணிக வரி அலுவலகத்திற்கு கீழ் பிரிவு எழுத்தராக மாற்றப்பட்டார். பின்னர் அவர் 2010 முதல் 2015 வரை கிராம விரிவாக்க அதிகாரியாகவும் பணியாற்றினார். அப்பொழுது பழங்குடியினர் மேம்பாட்டு திட்டங்களின் நன்மைகளை சமூகத்திற்கு வழங்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் பழங்குடியினர் ஊக்குவிப்பாளராக பணியாற்றினார்.

Teacher Mini Korman

மேலும் இந்த பழங்குடி சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன், மினி கோர்மன் 2015 இல் அம்புமாலாவின் ஒற்றை ஆசிரியர் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையிலான பணியில் சேர்ந்தார். முதலில், மாணவர்கள் வர தயங்கினர். குழந்தைகள் மற்றும் இங்கு வாழும் குடும்பங்களுடன் ஒரு நல்லுறவை உருவாக்க தனக்கு ஆறு மாதங்கள் பிடித்தன, என்றும் அவர் கூறுகிறார்.

Teacher Mini Korman

தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை 16 மாணவர்களும், 28 மாணவர்கள் மாநில கல்வித் துறையால் தொடங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்கின்றனர். சமத்துவமற்ற கல்வி டிஜிட்டல் பிரிவின் இடைவெளியை மேலும் விரிவுபடுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், மினி கோர்மன் போன்ற ஆசிரியர்கள் கஷ்டங்கள் இருந்தபோதிலும் இடைவெளியைக் குறைக்க முயற்சிப்பது கல்வி முறைக்கு இன்றியமையாதது.


Share this:

Related posts

அதிர்ச்சி தகவல்: ‘கொரோனா’ வைரஸ் ரூபாய் நோட்டில் ‘இத்தனை’ நாட்கள் உயிருடன் இருக்குமாம்?

MANIMARAN M

இ.எம்.ஐ. கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்… வட்டிக்கு வட்டி கட்டும் பிரச்சனையில் இருந்து விடுதலை…!

AMARA

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

குழந்தை பாக்கியம் நிச்சயம்…!! குபேரனை வணங்குங்கள், குடும்பத்தில் குழப்பம் நீங்கும்… இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN