“இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னன்னா… நம்ம சென்னை மக்களுக்கு இன்னைல இருந்து சரக்கு கிடைக்கப்போவது. இதுக்காக ஏற்பாடு செய்த செஞ்ச முதல்வர் ஐயாவுக்கு நன்றி. அப்புறம் டாஸ்மாக்குக்கு வர்றவங்க கண்டிப்பா டவுசர் போட்டுடுவாங்க… ஏன்னா மப் ஏறினாலும் மானத்தோட வூடு போய்ச் சேரணும்னு நம்ம மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டி சொல்றாருங்கோ.”
சென்னைக்கு வெளியே கொரோனா சுமாரத் தானே இருக்கு, அப்டினு நெனச்ச நம்ம அரசாங்கம், மே மாசத்துலயே சென்னைய தவிர மத்த மாவட்டத்துல உள்ள டாஸ்மாக் கடைங்களையெல்லாம் தொறந்து விட்டதால, குடிமகன்களுக்கெல்லாம் ஒரே குஷி.. ஆனா சென்னையில மட்டும் குடிமக்கள் பட்டபாடு சொல்லிமாலாது.
இப்ப படிப்படியா கொரோனா குறஞ்சு வரதுனாலயும், அரசாங்கத்துக்கு காசு பணம் பத்தாதனாலயும் சென்னையில கடைய தெறந்துலாம்னு முடிவு பண்ணி கடைய தெறக்க சொல்லிட்டாங்க.. இதக்கேட்ட சென்னையில உள்ள நம்ம குடிமகன்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.. அதுலயும் நம்ம மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் இருக்குல, அதோட தலை செல்லபாண்டியன் அண்ணாத்தே அப்டியே கண்ணு கலங்கிட்டாரு..
பத்திரிகைகாரங்ககிட்ட அவர் சொன்னது என்னன்னா “144 நாளா முடியிருந்த கடைய தெறக்க சொன்னவுடனேயே எனக்கு ஆனந்த கண்ணீர் வருது.. எங்கள பத்தியே யோசனையில இருந்த எடப்பாடியார் ஐயாவுக்கு நாங்க கடமபட்டிருக்கோம்.. அதனால அவரு சொல்படி கேட்டு நடப்போம்.. கடைக்கு வர்றவங்களுக்கு முகத்துக்கு மாஸ்க்கு குடுப்போம்.. மூணு மூணு மீட்டர் தூரம் தூரமா நின்னுதான் வாங்குவோம்.. டவுசர் போட்டுக்கிட்டு வருவோம்.. ஏன்னா.. மப்படிச்சாலும் மானத்தோட வாழனும்ல.. அப்புறம் அரசாங்கத்துக்கு நன்றிக் கடனா சென்னையில உள்ள 60% அதிகமா இருக்குற மது குடிக்கிறவங்க அரசாங்கத்த காப்பாத்த முன் வரனும்.” அப்டினு சொல்லிருக்காரு..