Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

Share this:

விநாயகர் சதுர்த்தி

இந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும் முதற்கடவுளாக வணங்கப்படும் கடவுள் விநாயகப் பெருமான். முழுமுதற்கடவுள் யானை முகத்தானுக்கு முக்கிய விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தியாகும், இவ்விழாவை ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தியாகவும், விநாயகர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது, விநாயகர் சதுர்த்தியன்று ஊரெல்லாம் பந்தல்கள் அமைத்து அதில் விநாயகர் சிலையை களிமண்ணில் செய்து அச்சிலைக்கு அலங்காரம் செய்து விநாயகருக்கு பிடித்த உணவுகளான சுண்டல், கொழுக்கட்டை, பொரி, பழங்கள் போன்ற பதார்த்தங்களை வைத்து பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.

 

விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் அந்த சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று அருகில் உள்ள ஆறு, குளம் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் விநாயகரை கரைத்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டு இந்த விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

பூஜை செய்ய சிறந்த நேரம்

விநாயகர் பிறந்த தினமான விநாயகர் சதுர்த்தி தினம் சிறப்பானதாகவே இருந்தாலும் விநாயகருக்கு பூஜை செய்யும் நேரம் மிக முக்கியமானதாகும். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்ய சிறந்த நேரமாக கௌரி பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபட்டுள்ள நல்ல நேரம் காலை 7.30 முதல் 9.00 வரை மற்றும் மாலை 4.45 முதல் 5.45 வரையான நேரங்களில் பூஜை செய்து வணங்குவது சிறப்பாகும். கணபதி ஹோமம் செய்ய நல்ல நேரம் அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணி வரை செய்வது சிறப்பாகும்.

அரசு விதித்துள்ள கட்டுபாடுகள்

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நாடு முழுவதும் பல விதிமுறைகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடக்கூடாது. கோவில்களில் கூட்டம் சேரும் விதமாக இவ்விழாவை நடத்தக்கூடாது. விநாயகர் சிலையை வாங்கவோ, கரைக்கவோ, ஊர்வளமாக சென்றால் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

ஆகவே அவரவர் வீடுகளில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து விநாயகருக்கு பூஜைகள் செய்து வணங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

NEWSKADAI

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

AMARA

தொடர்ந்து விலை ஏறி, இறங்கிக்கொண்டே இருக்கும் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலை…

NEWSKADAI