தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது, தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரென்டாம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டு வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்விதுறை பணிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுதேர்வுகள் மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெருகிறது. தேர்வுகள் காலை 10.15 முதல் பிற்பகல் 01.15 வரை மூன்று மணி நேரம் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 3 – மொழிப்பாடம்
மே 5 – ஆங்கிலம்
மே 7 – கணினி அறிவியல்
மே 11 – இயற்பியல், பொருளாதாரம்
மே 17 – கணிதம், விலங்கியல்,
மே 19 – உயிரியல், வரலாறு
மே 21 – வேதியியல், கணக்குப் பதிவியல்
இத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதுகிறார்கள்.