Newskadai.com
தமிழ்நாடு

”ரூ.20 இருந்தால் மட்டும் போதும்”… தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இதை வாங்கிக்கொள்ளலாம்…!

Share this:

ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தினை முதலமைச்சர் பழனிசாமி அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைத்தார், இத்திட்டம் மதுரை உள்பட ஆறு மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் வரும் 16ம் தேதி தொடங்கப்படும் என அறிவித்துள்ளதால், இத்திட்டத்தில் மக்கள் எந்த பகுதிகளில் வசித்தாலும், அங்கு உள்ள ரேஷன் கடைகளில் தங்களுக்கான ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதுவரை இருந்த முறையில் ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்பட்டது. இனி ரே‌ஷன் கார்டிலும் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு செய்து ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியும்.

இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் கைரேகை கருவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டதை தமிழகமெங்கும் செயல்படுத்தும் பணிகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது, முதற்கட்டமாக மதுரையில் உள்ள 1,389 கடைகளில் அதற்கான பணிகள் நடந்து வருகிறது.


புதிய குடும்ப அட்டை மற்றும் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், உறுப்பினர்கள் நீக்கம் செய்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெற முடியாமல் இருந்தது, கொரோனா பரவல் காரணமாக ஐந்து மாதங்களாக நிறுத்தி வகைக்கப்பட்டிருந்த சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. தற்போது அந்த பிரச்சனை தீர்க்கப்படும் வகையில் குடும்ப அட்டையின் நகலை பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

புதிய குடும்ப நகல் அட்டை பெற விரும்புபவர்கள் http://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அதற்கான ஒப்புகை சீட்டினை பெற்று சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் ரூ.20 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

இந்த 5 மாவட்ட மக்கள் உஷார்… அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து வெளுக்கப்போகும் மழை…!

THAVAMANI NATARAJAN

‘குடி’மகன்களுக்கு குஷியான செய்தி…. சென்னையில் டாஸ்மாக் திறப்பு குறித்து அதிரடி அறிவிப்பு…!!

AMARA

“இந்த ஐடியா நமக்கு வராம போச்சே ” பெண்கள் நடத்திய தினுசான போராட்டம்

MANIMARAN M

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

சாலையில் அறுந்து கிடந்த மின் ஒயர்… உடல் கருகி துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்…!

THAVAMANI NATARAJAN

பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு… பவானிஸ்வரர் கோவிலுக்கு அபாய எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN