Newskadai.com
தமிழ்நாடு

பக்தர்களுக்கு நல்ல செய்தி: இன்று கோயில்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சிக்கிட்டு போங்க…!!

Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது, இதனால் கோவில்கள் மற்றும் வழிபாட்டுதலங்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது, இதையடுத்து தமிழகத்தில் கோவில்களில் பூஜைகள் நடைபெற்று வந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

Temple

இதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அனைத்து கோவில்கள் மற்றும் வழிபாட்டுதலங்கள் திறக்க அனுமதியளித்துள்ளது இதை தொடர்ந்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், தஞ்சை பெரிய கோவில், நாகை நாகூர் தர்கா மற்றும் பல்வேறு கோவில்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவில்களில் கொரோனா தொற்று பரவாலை தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்:

 • திருக்கோவில்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும்.

 • பக்தர்கள் தங்களின் காலணிகளை தாங்களாகவே காலணி பாதுகாகும் இடத்தில் வைத்து செல்லுதல் மற்றும் எடுத்து  செல்லுதல் வேண்டும்.

 • உடல் வெப்பநிலை அறியும் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்

 • உடல் வெப்பநிலை பரிசோதனையில் வெப்பம் அதிகம் இருப்பின் திருக்கோவில்களில் அனுமதிக்கப்பட மாட்டாது.

 • திருக்கோவில்களில் பக்தர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

 • திருக்கோவில்களில் பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் மற்றும் கால்களை நன்றாக தண்ணீரில் கழுவியபின் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

 • கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் குறிப்பிடப்பட்ட இடத்தில் வரிசையாக நின்று தரிசிக்க வேண்டும்.

 • தரிசனம் செய்யும் பக்த்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ, தீர்த்தங்கள், சடாரி தரிசனம் மற்றம் இதர பிரசாதங்கள் வழங்க அனுமதியில்லை.

 • காணிக்கை செலுத்தும் பக்தர்கள் உண்டியலை தொடாமல் போதிய இடைவெளியை கடைபிடித்து உண்டியலில் தங்களின் காணிக்கையை செலுத்த வேண்டும்.

 • பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சென்று தரிசனம் செய்ய வேண்டும் தரையில் படுத்து வணங்குதல் கூடாது.

 • இறைவழிபாடு நடத்தும் அர்ச்சகர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

 • சாமி சிலைகள் மற்றும் கோவில் சுவர் பகுதிகளை தொடக்கூடாது. தேங்காய்,  பூ, பழங்கள் கொண்டு வருவதை தவிர்த்தல் வேண்டும்.

 • திருக்கோவில்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் இருமல் மற்றும் தும்மல் வரும் போது கைக்குட்டை பயன்படுத்துதல் வேண்டும்.

 • கோவில்களில் நடைபெறும் பூஜைகள் அபிஷேகம் மற்றும் உற்சவத்தின் பொழுது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

 • மேலும் அரசு கூறியுள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


Share this:

Related posts

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

NEWSKADAI

வரலாற்றில் முதன் முறையாக தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்கள்…

MANIMARAN M

ஏழைகளின் நண்பன் 10 ரூபாய் டாக்டர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விரட்டி வந்த எமன்!!

NEWSKADAI