Newskadai.com
தமிழ்நாடு

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

Palaniswami
Share this:

நேற்று மத்திய அரசு 4ம் கட்ட தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊடரங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தளர்வுகளுடன் தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவை எல்லாம் தடையின்றி செயல்படலாம்…

  • இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது

  • தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே மக்கள் பயணிக்க இ-பாஸ் நடைமுறை ரத்து; வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர இ-பாஸ் நடைமுறை தொடரும்

  • மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி; சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து சேவை தொடக்கம்

  • சென்னையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கும்

  • செப். 1ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்

  • தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்

  • வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

  • தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி

  • கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் உண்டு

  • சினிமா சூட்டிங் அனுமதி – பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

  • பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

  • தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி

  • ஐ.டி.நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி; தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரியலாம்

Share this:

Related posts

JEE தேர்வு எழுத முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு கதறும் மாணவர்கள்… மாவட்டம் டூ மாவட்டம் செல்ல பேருந்து இயக்கம் இல்லாததால் அவலம்…!

POONKUZHALI

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

AMARA

”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்

THAVAMANI NATARAJAN

கோவை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு… டாய்லெட்டில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களால் அதிர்ச்சி…!

AMARA

தென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக ஆய்வுக்கு புறப்பட தயாராகும் எடப்பாடியார்…!!

MANIMARAN M

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..!!!

MANIMARAN M