தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனாவுக்கு எதிராக போடும் முன் களப் பணியாளர்களான அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வந்த 84 ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 35 ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் படிக்க: http://இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…!!
இதனால் ஆளுநர் மாளிகையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது வரை ஆளுநர் பன்வாரிலால் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்றே 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.