Newskadai.com
தமிழ்நாடு

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

Share this:

வருடா வருடம் இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் பண்டிகை விநாயக சதூர்த்தி பண்டிகை. விநாயக சதூர்த்தியன்று விநாயகர் சிலைகளை பல இடங்களில் வைத்து பூஜை செய்து பின் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்து குதூகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அந்நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பொது மக்கள் நலன் கருதி பொது வெளியில மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பல தடைகளுடன் கூடிய பொது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:http://காசு கொழுத்துபோன நித்யானந்தா… கைலாசாவுக்கு தனி பேங்கு தெறக்கப்போறாராம்…

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயக சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொதுமக்கள் நலன் கருதி, கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இச்சூழலில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதையும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதையும் அனுமதிக்க இயலாது.

மேலும், பண்டிகை கொண்டாட்டத்தில் தமிழக அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் அறிவுறுத்தப்படுகிறது, என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Share this:

Related posts

இன்று +1 விடைத்தாள் நகல் வெளியீடு… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

‘நீ கிறுக்குத்தனமா கேள்வி கேட்டால்’… லஞ்சம் குறித்த கேள்வியால் கடுப்பான வேளாண் துறை அமைச்சர்…!

AMARA

பிரபல கார் நிறுவனத்திற்கு நீதிமன்றம் வைத்த ‘குட்டு’… தமிழக அரசுக்கும் அதிரடி உத்தரவு!

AMARA

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…!!

NEWSKADAI

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M