Newskadai.com
தமிழ்நாடு

கட்டுபாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை : தமிழக அரசின் அவசர சட்டம்…

Share this:

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுபாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பல தளர்வுகளை அறிவித்து மத்திய மாநில அரசுகள் பொது மக்களை ஆசுவாசப்படுத்தின. தமிழகத்தில் பொது போக்குவரத்து அனுமதி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என்ற தளர்வுகளுடன் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற கட்டுபாடுகளை தமிழக அரசு வழிக்காட்டுதலாக அறிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மீறுபவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொது போக்குவரத்து அனுமதி, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி என மேலும் பல தளர்வுகள் அறிவித்துள்ளது. இதனால் வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும், மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் அவசர சட்டம் ஒன்றினை பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி கொரோனா தடுப்பு விதிகளை மேலும் கடுமையாக்க, தொற்று நோய் தடுப்புச் சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்து அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அவசரச் சட்டத்தின் கீழ் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் வகையில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகு ஓரிரு நாட்களில் அமல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

கள்ளக்காதலால் 3 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்… ஈவு இரக்கமற்ற தாயின் கொடூர செயல்…!!

POONKUZHALI

இந்தியாவிலேயே முதன் முறை… எடப்பாடி அதிரடியால் கதிகலங்கும் கொரோனா…!!

THAVAMANI NATARAJAN

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

MANIMARAN M

“இ பாஸ் தேவையா?”… தமிழக அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மனித உரிமை ஆணையம்.

MANIMARAN M

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

MANIMARAN M