Newskadai.com
அரசியல்

அடிதூள்: சேலம், தேனி, திருப்பூரில் கால்நடை மருத்துவக் கல்லூரி… அசத்தும் தமிழக அரசு…!!

Share this:

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி , பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, தென்கரை கோட்டை ஊராட்சி, வடகரை பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதில் அளித்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவமனை அமைக்க 3000 கால்நடை இருக்க வேண்டும், வடகரையில் 3300 கால்நடைகள் இருப்பதால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடைகிளைநிலையம் அமைக்க ஆவணம் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் சேலம் , தேனி ,திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1300 கோடி நிதி ஒதுக்கி கால்நடை மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் உருவாகி வரும் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரியும், தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஒரு மருத்துவக் கல்லூரியும், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒரு மருத்துவக் கல்லூரி என மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரே ஆண்டில் தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது என தெரிவித்த அவர், தமிழக வரலாற்றில் ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என எடுத்துரைத்தார்.


Share this:

Related posts

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

AMARA

புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத ஒன்று – நாராயணசாமி அதிரடி கருத்து…!!

POONKUZHALI

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

இன்று கூடுகிறது அதிமுக உயர்மட்டக் குழு : எதிர்ப்பார்ப்பில் தமிழக அரசியல்…

MANIMARAN M

ஸ்டாலின் அதற்கு சரிபட மாட்டார்… துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள்… சுப்ரமணியன் சுவாமி பொளேர்…!

AMARA

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA