Newskadai.com
அரசியல்

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

Share this:

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த மே மாதம் முதல் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சென்னையில் மட்டும் கொரோனா தொற்றின் தீவிரம் கருதி டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது. தற்போது சென்னையில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டாஸ்மாக் திறப்பிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி; அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும். யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். கொரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம்! என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 


Share this:

Related posts

கூட்டணி கட்சியிலேயே கைவைத்த அதிமுக… பாஜக தலைவர் எல்.முருகன் மீது பாய்ந்தது வழக்கு…!!

MANIMARAN M

திமுக பொதுச்செயலாளராகிறார் துரைமுருகன்?… செப்.9-ல் கூடுகிறது திமுக பொதுக்குழு…!

AMARA

முதல்வர் வேட்பாளர் யார்.. ? முடிவு எடுக்க முடியாமல் திணறும் அதிமுக…

MANIMARAN M

தமிழக அரசே! பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி..

MANIMARAN M

“மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம்”… திமுக பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!

NEWSKADAI

வேட்டியை மடித்துக் கட்டி வயலில் இறங்கிய ஸ்டாலின்… விவசாய பெண்களிடம் குறை கேட்பு…!

AMARA