Newskadai.com
தமிழ்நாடு

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

Share this:

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண்பாலகோபாலன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

1. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி அருண்பாலகோபாலன் சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.

2. சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக பதவி வகித்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

3.சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி சிபிசக்ரவத்தி சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

4.சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பி ஜெயலட்சுமி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

5.தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்பியாக உள்ள ஜெயச்சந்திரன் தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக இருந்த சி.ஷியாமலா தேவி சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

7. சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்பியாக இருந்த கண்ணம்மாள் சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.

8. சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக இருந்த தீபா சத்யன் அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. அம்பத்தூர் துணை ஆணையர் நிஷா சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு உள்துறைச் செயலர் ஏ.கே.பிரபாகரன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

5 ஜி காலத்தில் இப்படியொரு சிறுவன்… விவசாயத்தில் புகுந்து விளையாடும் 9 வயது பிரகதீஷ்…!!

MANIMARAN M

செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… எவற்றுக்கெல்லாம் தடை தொடருகிறது தெரியுமா??

AMARA

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

இந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…!!

MANIMARAN M

மக்களே இனி புகார் மனுவை தூக்கிட்டு அலைய வேண்டாம்… உட்கார்ந்த இடத்தில் இருந்தே தீர்வை பெற முதல்வரின் புதிய திட்டம்…!!

AMARA