Newskadai.com
தமிழ்நாடு

நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு…

Share this:

20-21 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 92 ஆயிரம் இடங்களைக் கொண்டுள்ளது. இவ்வாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதிகமான மாணவர்கள் விண்ணபித்துள்ள காரணத்தால் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்து மாணவர்கள் சேர்க்கை செய்துக் கொள்ளும்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் விழுப்புரம், நாகை, ராணிப்பேட்டை, விருதுநகர், அரியலூர், கோவை, கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக அரசு கலை கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான சுற்றறிக்கையை அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கும் தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பி வைத்துள்ளார். விரைவில் இந்த 7 மாவட்டங்களிலும் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கபட இருக்கிறது.


Share this:

Related posts

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

MANIMARAN M

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

தனியார் பள்ளிகளுக்கு வருகிறது ஆப்பு…. ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தில் தலையிடுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க ஆணை…!

MANIMARAN M

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

NEWSKADAI