கொரோனா ஊரடங்கை மேலும் ஒருவாரத்திற்கு அதாவது ஜூன் மாதம் 7-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதால் இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் தமிழக அரசு முதலில் இரண்டு வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு அமல்படுத்தியது. அதன்பின் கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் முழு ஊரடங்கை வருகிற ஜூன் 7-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடமாடும் காய்கறி கடைகள், பழக்கடைகள் அதன்சார்ந்த துறைகள் மூலம் வாகனங்களில் விற்கப்படும் நடைமுறை மட்டும் தொடரும் என அரசு அறிவித்துள்ளது.