Newskadai.com
தமிழ்நாடு

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

Share this:

தமிழகத்தின் முதலமைசரின் பதவி காலம் முடிவடையும் நிலையில் அடுத்த ஐந்தாண்டுக்கான முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணி வரும் 2021 ஆண்டில் நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி ஒன்றாம் தேதியை அடிப்படையாக கொண்டே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து  வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் நடப்பாண்டில் தொடங்கியுள்ளது.
Election
இதன் அடிப்படையில் நடப்பாண்டில் நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பெயர் திருத்தம் செய்தல், பெயர் நீக்குதல், உள்ளிட்ட திருதங்களை  நவம்பர் 16 ல் இருந்து டிசம்பர் 15ம் தேதி வரை மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் 2021 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்  மற்றும் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தி அடைந்தர்க்கான சான்றிதழை கட்டாயம்  சமர்பிக்கவேண்டும். மேலும் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றிக்கு ஆண்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அத்ற்கான வெப்சைட் www.nvsp.in என்ற இணையதள த்தை பயன்படுத்திக் கொள்ளலாம், மற்றும் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 15 நாட்கள் தாமதமாக வெளியிடப்படுவதாக முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து 2021 ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள், முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது போன்ற பல்வேறான  செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

Share this:

Related posts

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

MANIMARAN M

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு முக்கிய குற்றவாளி திடீர் மரணம்… சிபிஐ அதிர்ச்சி

MANIMARAN M

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை… அரை மணி நேரத்திற்கு இவ்வளவு காசா?

THAVAMANI NATARAJAN

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..!!!

MANIMARAN M

தலைக்கேறிய குடிபோதை… இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்…!!

THAVAMANI NATARAJAN

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M