Newskadai.com
தமிழ்நாடு

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

Share this:

இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சமூக இடைவெளியோடு கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் சுதந்திர தின விழா மிகவும் எளியான முறையில் கொண்டாடப்படுகிறது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  4வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு அரசு  சார்பில் நடக்கும் சுதந்திர தின விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர்.
இன்று காலை தேசியக்  கொடியை ஏற்றி வைத்து சிறப்பு உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி ,
சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 16,000 ரூபாயில் இருந்த 17,000 ரூபாயக உயர்த்ப்படுகிறது. சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கான ஓய்வூதியம் 8,000  ரூபாயில் இருந்து 8,500 ரூபாயாகவும் உயர்த்தவுள்ளது. மேலும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தவித்த  64,661 தமிழர்களை  தமிழகத்திற்கு அழைத்து வந்ததுள்ளோம்.

Edappadi

தமிழக மக்களுக்காக இலவசமாக முகக் கவசங்களை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகக் கவசங்களை பல முறை பயன்படுத்தும் வண்ணம் தயாரிக் கப்பட்டுள்ளது. மாநில அளவில் மிகவும் அதிக படுக்கைகள் 1,29,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த தக்க நடிவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் எதிராக  பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போராடி வெற்றி காண்போம்.   மற்றும் டெல்டா பகுதியில் 4,11,000 ஏக்கரில் குறுவை நெல் பயிர் சாகுபடி செய்து சாதனை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து டாக்டர் அப்துல் கலாம் விருது இளைஞர் அறக்கட்டளை சார்ந்த செல்வம், ஆனந்தம் அவர்களுக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது செந்தமிழ்செல்வி, முத்தம்மாள் ஆனந்தவள்ளி ஆகியோருக்கும், மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், முதன்மை ஆராய்ச்சியாளர்களுக்கு கோவிட்-19 தொடர்பான முதலமைச்சரின் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது.

Share this:

Related posts

சேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

அமைச்சர் ஓ எஸ் மணியன் மனைவி உடல் நலக்குறைவால் மரணம்…

MANIMARAN M

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

MANIMARAN M

“8 முறை கோரிக்கை வைத்தும் எதுவும் கண்டுக்கல”…. போராட்டத்தில் குதித்த அரசின் முக்கிய துறை…!

THAVAMANI NATARAJAN

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M