Newskadai.com
அரசியல்

கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது சட்டமன்ற கூட்டத் தொடர்…

Share this:

ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற அரங்கில் கொரோனா தடுப்பு வழிமுறை தனி மனித இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்பதால் கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் கலைவாணர் அரங்கில் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உடல் வெப்ப பரிசோதனை, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி தெளிப்பது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது போன்ற விதிமுறைகள் பின்பற்றி கூட்டம் நடத்தப்படவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். அதனடிபடையில் திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் குறித்து பேச சபாநாயகர் தனபாலிடம் கவனஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம், பிரதமரின் கிசான் முறைகேடு, புதிய கல்வி கொள்கை போன்ற முக்கிய பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும் கொரோனா சம்பந்தமான விவகாரங்களையும் கையில் எடுக்கும் என்று தெரிகிறது.


Share this:

Related posts

“தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது”… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!

AMARA

“இந்திய மாணவர்களின் எதிர்காலம் இனி வெளிச்சமாகும்”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று இறுதி சடங்கு…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நல்லடக்கம்…!

AMARA

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

“ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்”… தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அறிக்கை…!

AMARA

விவசாயத் திட்டத்தை அடுத்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மோசடி…

MANIMARAN M