நாடெங்கும் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது போதிய இடவசதி இல்லாததால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் இதற்க்கான வசதிகளை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ”அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு” என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
இத்திட்டதின் சிறப்பம்சமாக கொரோனா நோய்தொற்று மற்றும் அறிகுறி உள்ளவர்கள் ரூ.2,500 செலுத்தினால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், டிஜிட்டல் தெர்மா மீட்டர், சோப்பு, கபசுர குடிநீர் பொடி,அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், விட்டமின் ஸங்க மாத்திரைகள், முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி சோப்பு அடங்கிய மருத்துவ பெட்டகம் வழங்கப்படும். இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் அறிமுக படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொருட்களை வைத்து நோய் தொற்றும் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்து கொள்ளலாம் இதனை வாட்ஸ் அப் மற்றும் காணொலி மூலம் கண்கானிக்கப்படும், 24 மணி நேரமும் மனநல மருத்துவ நிருபனரை தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னையில் தங்களின் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களை 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் கண்கானிப்பில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.