Newskadai.com
சினிமா

எஸ்.பி.பி.க்காக வீதிக்கு வந்த ரசிகர்கள்… , “பாடும் நிலா எழுந்து வா” என உருக்கமான வேண்டுதல்….!

Share this:

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SPB

கடந்த 14ம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவே குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட்டு பிரார்த்தனை நடத்தியது போல், தற்போது எஸ்.பி.பி.க்கும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இன்று சரியாக 6 மணிக்கு ஒரு நிமிடம் எஸ்.பி.பி.பாடலை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்யுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி சரியாக மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் தங்களது வீடுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களை ஒலிக்க விட்டு பிரார்த்தனை செய்தனர். தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கையில் மெழுவர்த்தி ஏந்திய வண்ணம் சாலையில் நின்றபடி எஸ்.பி.பி.க்காக மனமுருகி பிரார்த்தனை செய்தனர். தனது வசீகர குரலால் இன்பத்திலும், துன்பத்திலும் நம்முடன் இருந்த எஸ்.பி.பி.யின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டுமென நாமும் பிரார்த்திப்போம்….


Share this:

Related posts

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI

“உன்னத மனிதர் உறங்குகிறார்”.. தந்தையின் மறைவு குறித்து பிரபல நடிகரின் கண்ணீர் பதிவு…!!

THAVAMANI NATARAJAN

மறைந்த நடிகர் சுஷாந்திற்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான்…!!

NEWSKADAI

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படங்களை திரையிட மாட்டோம்… திடீரென போர்க்கொடி தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

போதைப்பொருள் விவகாரத்தில் பகீர் திருப்பம்… ஜெயம் ரவி பட நடிகை அதிரடி கைது…!!

MANIMARAN M

சுஷாந்த் சிங் மரண வழக்கு… அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்…!!

AMARA