Newskadai.com
சினிமா தேர்டு ஐ

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பில்லையா? … ஆபாச போஸ்டருக்கு எப்படி அய்யா அனுமதி கொடுத்தீங்க…!

Share this:

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என அடல்ட் காமெடி என்கிற பெயரில் படு ஆபாசமான படங்களை எடுத்து மார்தட்டிக்கொள்ளும் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது இரண்டாம் குத்து என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆபாசம், வக்கிரத்தின் உச்சம் என காரி துப்பும் அளவிற்கு படுகேவலாக இருந்தது.

அடல்ட் காமெடி, ‘A’ சர்ட்டிபிகேட் மூவி என்ற பெயரில் எந்த கருமத்தை வேண்டுமானாலும் நீங்கள் எடுக்கலாம், அதை பார்ப்பவர்கள் பார்க்கட்டும். ஆனால் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை கலக்கும் விதமாக இப்படியொரு ஒரு ஆபாச போஸ்டரை படக்குழு ஏன் வெளியிட வேண்டும். தற்போதைய கொரோனா நேரத்தில் ஆன்லைன் கிளாஸுக்காக அனைத்து பிள்ளைகள் கையிலும் செல்போன் இருக்கிறது. ஏற்கனவே குழந்தைகள் மீது வக்கிரத்தை கட்டவிழ்த்துவிடும் இந்த சமூகத்தில் இப்படிப்பட்ட போஸ்டர்கள் தேவையா?.

தொற்று தொட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் தமிழ் சினிமாவில் இப்படியொரு சாக்கடை கலந்துவிட்டதே… அதை யாருமே கேள்வி கேட்க மாட்டார்களா? என சாமானியர்கள் புலம்பிக்கொண்டிருந்த சமயத்தில், தமிழ் சினிமா இயக்குநர்களில் ஜாம்பாவன் இயக்குநர் பாரதிராஜா, நெத்தி பொட்டில் அடிப்பது போல் நன்றாக கேள்வி கேட்டார். ஆனால் அதையும் அந்த வெட்கம் கேட்ட கூட்டம் கலாய்க்கிறது. திரைத்துறையினர் இந்த செய்கையை கண்டிக்காவிட்டாலும், சோசியல் மீடியாவில் உலவும் நெட்டிசன்கள் சந்தோஷ் ஜெயக்குமாரை சும்மா விடவில்லை.

உங்க வீட்டில் இருக்கும் பெண்களுடன் தியேட்டரில் உட்கார்ந்து இந்த மாதிரி படத்தை பார்த்து விட்டு வந்து அப்புறம் பேசு?… உங்க வீட்டில எல்லாம் பெண்களே இல்லையா? அவங்க கிட்ட போய் எப்படி இந்த டைட்டிலை சொல்லுவா? என சரமாரியாக வெளுத்து வாங்கினார். ஆனால் அதை எல்லாம் அந்த மூடர் கூட்டம் ஃப்ரீ பப்ளி சிட்டியாக பார்ப்பது தான் வேதனையின் உச்சம். இதெல்லாம் இருக்கட்டும் ஓட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளித்து போயிருக்கும் இப்படிப்பட்ட கேவலமான போஸ்டரை வெளியிட வேண்டும் என்றால் தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பது தெரியுமா?.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயலிழந்து, அதற்கு பதிலாக அரசு நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக படத்தின் சினிமா போஸ்டர்களை வெளியிட வேண்டும் என்றால் கூட அதற்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் பப்ளிசிட்டி அனுமதி பெற வேண்டும். அப்படி இரண்டாம் குத்து படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி இருந்தால் கட்டாயம் அவர்கள் இப்படிப்பட்ட ஆபாச போஸ்டருக்கு அனுமதி கொடுக்கமாட்டோம் என விரட்டி இருக்கலாம்.

மாறாக தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி பெறாமல் போஸ்டர்கள் வெளியாகி இருந்தால் அந்த படக்குழு மீது நடவடிக்கை எடுக்கலாம். அப்படி எதையுமே செய்யாமல் ஏதோ மூன்றாம் கட்ட பார்வையாளர்கள் போல் இந்த பிரச்சனையை மெளனமாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பது ஏன்?. இவர்களின் மெளனம் கொடுத்த தைரியம் தமிழ் சினிமாவை மட்டும் சீரழிக்கவில்லை,

கோவையில் பெண்கள் பள்ளி முன்பு இரண்டாம் குத்து பட போஸ்டரை ஒட்டும் அளவிற்கு தைரியத்தையும் கொடுத்துள்ளது. தமிழக மக்களின் மீது அக்கறையுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் அரசும், அமைச்சர் கடம்பூர் ராஜுவும் இந்த படத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தமிழ் சினிமாவின் கண்ணியம் காக்கப்படும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது.


Share this:

Related posts

“நாட்டின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்”… உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்பதாக சூர்யா உறுதி…!

MANIMARAN M

சூர்யாவிற்கு துணை நிற்கும் அஜித், தனுஷ், ஜெயம் ரவி… போஸ்டர் ஓட்டி தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!

AMARA

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்… எந்த கோவிலில் நடக்கப்போகுது தெரியுமா?

AMARA

‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன?

NEWSKADAI

இது வேற லெவல் வெறித்தனமால்ல இருக்கு… மதுரை சிம்பு ரசிகர்களின் தெறி மாஸ் போஸ்டர்…!

AMARA

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M