Newskadai.com
தமிழ்நாடு

காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

Police
Share this:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தேர்விற்கான விண்ணப்பங்கள் http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை இணையதளத்தில் தரப்பட்டுள்ளது.

 Police காலிப்பணியிடங்கள்

  • இரண்டாம் நிலை காவலர் மாவட்ட/மாநகர ஆயுதப்படை – 3784 இடங்கள்,
  • இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை – 3545 இடங்கள்,
  • இரண்டாம் நிலை சிறைக் காவலர் -119 இடங்கள்,
  • தீயணைப்பாளர் – 458 இடங்கள், என மொத்தம் 10,906 காலியிடங்கள் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதார் பத்தாம் வகுப்பில் தமிழை ஒருபாடமாக படித்திருக்க வேண்டும், இல்லையெனில் தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டிற்குள் தேர்ச்சி பெற வேண்டும்.

வயது தகுதி

விண்ணப்பதாரர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும், 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

Police

இத்தேர்விற்கான முக்கிய நாட்கள்

  • விளம்பர நாள் 17.09.2020
  • இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 26.10.2020
  • இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் 26.09.2020
  • எழுத்து தேர்வு நடைபெரும் நாள் 13.12.2020

Share this:

Related posts

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI

கொரோனாவை வைத்து கொள்ளை லாபத்திற்கு பிளான்போடும் தனியார் மருத்துவம்… தமிழக அரசு தடாலடி எச்சரிக்கை

MANIMARAN M

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி…!!

MANIMARAN M

தமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…!!

THAVAMANI NATARAJAN

மீண்டு(ம்) வந்தது கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை… தமிழகத்தில் தொடங்கியது ஆய்வு…!!

THAVAMANI NATARAJAN

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி விசாரணை…

MANIMARAN M