Newskadai.com
தமிழ்நாடு

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா ?அமைச்சர் பரபரப்பு தகவல்…

Share this:

இந்தியாவிலேயே அதிக ஜிடிபியை, கொண்டுள்ள சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், துறைமுகங்கள், தட்பவெப்ப சூழல், தேவைக்கேற்ற தொழிலாளர்கள் மற்றும் அதிகமான நுகர்வோர் அனைத்தும் உள்ள மாநிலம் தான் தமிழகம். இருப்பினும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் 14வது இடத்தில் தமிழகம் வைக்கப்பட்டுள்ளது.

இது எதனால்? மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெறுவதால் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா? என்ற கேள்விக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் செய்தியாளர்களிடம், “கடந்த ஆண்டு 15வது இடத்தில் இருந்தோம். இந்த ஆண்டு 14வது இடத்தில் இருக்கிறோம். முன்னேறி இருக்கிறோம் இன்னும் முன்னேற்றம் தேவை என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் தமிழகத்தில் நிலவும் சிக்கல்களும் முக்கிய காரணம். பிரச்சனைகளை களைய புதிய முயற்சிகளை கொண்டு வந்துள்ளோம். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து ஒப்புதல்களையும் 30 நாட்களில் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

 


Share this:

Related posts

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

எங்கே மனிதாபிமானம்?… மீன் லாரி விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்காமல் மீனை அள்ளிச்சென்ற மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

சென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

AMARA

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI

“நிலம் கையக்கப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை”…. அதிரடி சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு…!!

MANIMARAN M