Newskadai.com
தமிழ்நாடு

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

Share this:

மும்மொழி கல்வி, கல்லூரி சேர்வதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வு, தொழிற்கல்விக்கு முக்கியத்துவம், எம்.ஃபில். படிப்பு நிறுத்தம் போன்ற அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை (NEP-2020)-யை மத்திய அரசு அறிவித்தது. இந்த புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதிலும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக தமிழகத்தில் மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சி அனைவரிடமிருந்தும் பலத்த எதிர்ப்புகள் உருவாகின. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மும்மொழிக் கல்விக்கு இடமில்லை என்றும், இங்கு இருமொழிக் கல்வியே தொடரும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும் புதிய கல்விக் கொள்கைக் குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன் மற்றும் துரைசாமி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச்செல்வி, காமராஜர் பல்கலைக்கழக கிருஷ்ணன் உள்ளிட்டோர் புதிய கல்விக் கொள்கை ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் ஆலோசனைபடி புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

சேலம் மக்களே உஷார்: இந்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு போகாதீங்க…!!

THAVAMANI NATARAJAN

கடலில் குளிக்க தடை : வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்…

MANIMARAN M

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

நள்ளிரவில் வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்… பதறியடித்து போய் பார்த்த விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

MANIMARAN M

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M

மக்களே உஷார்: விரைவில் நிரம்ப போகிறது பவானி சாகர் அணை… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN