Newskadai.com
தமிழ்நாடு

“உள்ளங்களில் நல்லிணக்கம் நிலவ வாழ்த்துக்கள்”… முதல்வர், துணை முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!!

Share this:

இறைவனின் கட்டளைகளுக்கு பணிந்து நடப்பதே வாழ்வின் மகத்தான நெறி உணர்ந்தும் “பக்ரீத்” எனும் தியாகத் திருநாளில், அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எங்களது மனம் கனிந்த “பக்ரீத்” திருநாள் வாழ்ந்துகளைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  இருவரும் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் படிக்க:http://தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

வாழ்த்து செய்தியில்…

இறைத் தூதர் இப்ராகிம் தனது மகன் இஸ்மாயிலை, இறைவன் தனக்குக் கட்டளையிடுமாறு பலியிடத் துணிந்ததையும், இறை வார்த்தைக்கும், தனது தகப்பனின் ஆணைக்கும் பணிந்து, தானே பலியாக சம்மதித்த இஸ்மாயிலின் பணிவையும் இந்த நாளில் நாம் நினைவில் கொள்ளும் போது, நம்மையே நாம் தூய்மையாக்கிகொள்ள அழைக்கப்படுகிறோம்.

அப்படிப்பட்ட போற்றுதலுக்குறிய ‘திருநாளில் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் அன்பும், அமைதியும், நல்லிணக்கமும் நிலவ எங்கள் பிரார்த்தனை உரித்தாகுக.

மேலும் படிக்க:http://ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சி தலைவி அம்மா ஆகியோரது வழியில் அனைவருக்கும் “பக்ரீத்” தியாகத் திருநாள் வணக்கத்தையும், வாழ்த்தையும் மீண்டும் ஒரு முறை தெரிவித்து மகிழ்கிறோம் என அதிமுக சார்பில்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


Share this:

Related posts

விரைவில் நிரம்பப்போகும் மேட்டுர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி

THAVAMANI NATARAJAN

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

இன்று முதல் ஆரம்பம்… கொரோனா நோயாளிகளுக்காக முதல்வர் தொடங்கி வைத்த சிறப்பு சேவை…!

NEWSKADAI

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M

மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி

MANIMARAN M