Newskadai.com
உலகம்

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

Share this:

வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் களம் காணவுள்ளார். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் வேட்பாளருக்கு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை ஜோ பிடன் தேர்வு செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டுகளிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரிஸ், கடந்த 2016 செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்றவர். தற்போது கலிபோர்னியாவின் செனட்டராக இருக்கும் அவர், துணை அட்டர்னி ஜென்ரல், அட்டர்னி ஜென்ரல் பதவிகளையும் வகித்து வந்திருக்கிறார். கமலா ஹாரிஸுடைய தாய் தமிழ் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். வரும் காலத்தில் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடதக்கது.


Share this:

Related posts

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

நண்பர்களிடையே சமரசம்… கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!

MANIMARAN M

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

மக்களால் நான்… மக்களுக்காக நான்… பதவி விலகிய பிரதமர்…

MANIMARAN M

முற்றும் அமெரிக்கா – சீனா பனிப்போர்… தூதரகங்களை மூட அதிரடி உத்தரவு…!

NEWSKADAI

டிக்டாக்கை ஒன்னும் பண்ணமுடியாது போல… கைமாற்றும் வேலை ஆரம்பம்…

MANIMARAN M