Newskadai.com
சினிமா

இதோ… வெளியானது பிக்பாஸ் சீசன் 4 2nd புரோமோ.. இந்த முறை பேசியிருக்குறது கமல் இல்ல…!!

Share this:

அடுத்த வீட்டு சங்கதியை நம்ம வீட்டு வரவேற்பரையில் இருந்து பார்த்து ரசித்தால் எப்படி இருக்கும் அது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி, என பலரும் கிண்டல் செய்தாலும். காலம் காலமாக சீரியல் முன்னாடி உட்கார்த்துக்கிட்டு இருந்த அம்மா, பாட்டி எல்லாம் கூட இப்ப பிக்பாஸ் பேனாக மாறிவிட்டார். தமிழில் கடந்த 3 ஆண்டுகளாக வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சேனல்களின் டி.ஆர்.பி-யை எல்லாம் அடித்து துவம்சம் செய்தது என்றால் அது மிகையாகாது.

Kamal

கொரோனா லாக்டவுனில் வீட்டில் முடங்கி கிடக்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானால் நன்றாக இருக்குமே என அனைவரும் ஏங்கி கிடந்தனர். ஆனால் சின்னத்திரை படப்பிடிப்பை போல் பிக்பாஸ் ஷூட்டிங்கை நடத்துவது எளிதான காரியம் இல்லை என்பதால் அனுமதி கிடைக்காமல் இருந்தது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல கட்டுப்பாடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது.

  இதற்கான முதல் புரோமோ வீடியோவும் கடந்த 27ம் தேதி வெளியாகி தாறுமாறு வைரலானது. அந்த வீடியோவில் முழுக்க முழுக்க கமல் ஹாசன் தன் பாணியிலேயே லாக்டவுன் பற்றியும், அதிலிருந்து மீள்வது பற்றியும் பேசியிருப்பார். தற்போது சற்று நேரத்திற்கு முன்பு இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆன்லைன் கிளாஸ் அட்டர்ன் பண்ணாத பையனுக்கு அம்மா, சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்களுக்கு மளிகை கடைக்காரர், சோம்பேறி கணவனுக்கு கட்டளை போடும் மனைவி, லாக்டவுனில் பைக்கில் ஊர் சுற்றும் புள்ளைங்கோவுக்கு போலீஸ்காரர் ஆகியோர் எல்லாம் பிக்பாஸாக மாறி புத்திமதி சொன்னால் எப்படியிருக்கும் என்ற கற்பனையோடு வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த அசத்தல் வீடியோ…

 


Share this:

Related posts

ஷாலினியுடன் கருப்பு மாஸ்க் அணிந்த படி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்ட அஜித்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

POONKUZHALI

தொடர்ந்து கவலைக்கிடம்… எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான அறிக்கை…!!

AMARA

லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!

NEWSKADAI

எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது… பிரதமருக்கு முதல்வர் கடிதம்…!!!

MANIMARAN M

அள்ளிக்கொடுத்த கலியுக கர்ணன் சோனு சூட்… விருது கொடுத்து கெளரவித்த ஐ.நா…!

THAVAMANI NATARAJAN