Newskadai.com
இந்தியா

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

Share this:

ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். ரிலையன்ஸ் குழுமத்தை தோற்றுவித்தவரும் அதன் தலைவருமான திருபாய் அம்பானி மறைவிற்குப் பிறகு பாகப்பிரிவினையாக அனில் அம்பானி நிர்வாகத்தின் கீழ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சென்றது. ஜியோ முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது.அனில் அம்பானி கம்பெனி திவால் ஆனதால் அதற்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

Mukesh

ஆனால் அனில் அம்பானி நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய அலைக்கற்றை உரிமை கட்டணம் ரூபாய் 25,199 கோடியை ஜியோ செலுத்த மறுக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், “அலைக்கற்றை என்பது அரசுக்கு சொந்தமானது. தனியார் சொத்தல்ல. அதை பயன்படுத்தும் எவரும் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

SC

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையை மூன்றாண்டுகளாக உபயோகித்து வரும் ஜியோ நிறுவனம் ஆர். காம் நிறுவனத்தின் நிலுவைத் தொகையை ஏன் செலுத்தக்கூடாது. இவ்விரு நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அலைக்கற்றை பகிர்வு ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என கூறி இந்த வழக்கை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Share this:

Related posts

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

AMARA

தீராத செல்ஃபி மோகம்… சிறுமிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ…!

NEWSKADAI

குட் நியூஸ் : ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி…

MANIMARAN M

மத்திய கல்வி அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்… 40% JEE தேர்வு மாணவர்களின் நிலை என்ன..?

MANIMARAN M