Newskadai.com
இந்தியா

“அங்கு மசூதியே இல்லை… புதிய இந்தியாவின் நீதி”… உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கருத்து…!

Share this:

28 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி எஸ்.கே.யாதவ் இன்று வாசித்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்ட நிகழ்வு இல்லை, மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை, சமூக விரோதிகள் பாபர் மசூதியை இடித்த போது குற்றம்சாட்டவர்கள் அவர்களைத் தடுக்கவே முயற்சி செய்துள்ளனர் என்று தீர்ப்பு கூறினார்.

நாடே எதிர்பார்த்து காத்திருந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.  உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து வரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அங்கு மசூதியே இல்லை. புதிய இந்தியாவின் நீதி,” என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நீதித்துறை நீதியை வழங்காது என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்” என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

குஜராத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாப பலி..!!!

MANIMARAN M

கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து..! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி…

MANIMARAN M

மத்திய பிரதேசத்தில் தலை, பெங்களூருவில் உடல்… கொலையா? தற்கொலையா? குழம்பும் போலீசார்..!!

THAVAMANI NATARAJAN

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

MANIMARAN M

சரவணபவன் சாம்பாரில் பல்லி… அருவெறுப்பில் நெளிந்த காஸ்டமரால் வந்த ஆப்பு…!!

AMARA

கொரோனா வைரஸ் போயே போச்சு.!! பாஜக தலைவரின் அதிரடி பேச்சு…!!

MANIMARAN M