Newskadai.com
சினிமா வீடியோ

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

Share this:

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி. சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில், அப்பா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். மயக்கத்தில் இருந்து மீண்டுவிட்டார். தனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மருத்துவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். நன்றாக சுவாசிக்கிறார். இருப்பினும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உங்களுடைய பிரார்த்தனை தொடருங்கள். அப்பா விரைவில் பூரண குணமடைவார் என நல்ல செய்தி சொல்லியிருந்தார்.

Rajinikanth

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற வேண்டுமென வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலில் பாடி கோடி, கோடி மக்களை மகிழ்வித்தார் மதிப்பிற்குரிய எஸ்.பி.பி. அவர்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டியுள்ளார் என கேள்விப்பட்டத்தில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கிற எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ….


Share this:

Related posts

கருத்து சொல்ல மட்டுமல்ல… சொல்லால் விமர்சித்தவர்களை செயலால் திருப்பி அடித்த ஜோதிகா…!

AMARA

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

ட்விட்டரில் கட்டிப்புரண்டு சண்டை… இரண்டு நடிகைகளுக்கிடையே மாட்டிக்கொண்ட பிரபல இயக்குநர்…!!

NEWSKADAI

ராணுவ வீரர்களின் தேசபக்தி… நெஞ்சைநிமிர வைக்கும் வீடியோ…

NEWSKADAI

ஓடிடி தளத்தில் வெளியாகிறது “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதியுடன் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

AMARA

கட்டுக்கடங்கா தீ… பிளாஸ்டிக் தொழிற்சாலை எறிந்து நாசம்… பதறவைக்கும் வீடியோ

NEWSKADAI