Newskadai.com
அரசியல்

கணவரால் கட்டாயப்படுத்தப்பட்ட குஷ்பு… முதல் நாளே பாஜக கூடாரத்தில் அரங்கேறிய அவமானம்…!

Kushboo join bjp
Share this:

குஷ்பு பாஜகவில் இணைந்ததில் என்ன அதிசயம் இருக்கு… ஏற்கனவே அவர் திமுக, காங்கிரஸ் என கட்சி மாறியவர் தானே என பலருக்கும் கேள்வி எழும். ஆனால் எடுத்த எடுப்பில் பாஜகவில் போய் சேருகிற அளவிற்கு குஷ்பு ஒன்றும் அரசியல் தெரியாதவரோ, அறிவில்லாதவரோ கிடையாது. தான் ஒரு ட்வீட் போட்டால் கூட அது எவ்வளவு பேருக்கு சென்று சேரும் எனத் தெரிந்த குஷ்புவா? இப்படி எடுத்தோம் கவுத்தோம் என முடிவெடுத்திருக்க போகிறார். இஸ்லாமியரான குஷ்புவிற்கு அடிப்படையாகவே பாஜக என்றாலே அறவே ஆகாது.

Kushboo join bjp

அப்படி என்றால் எப்படி போய் பாஜகவில் இணைந்தார் என்றால், குஷ்பு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை. கணவர் சுந்தர் சி அடுத்தடுத்து எடுத்த படங்கள் பெரிதாக ஹிட்டடிக்கவில்லை. கைவசம் உள்ள அரண்மனை 3 படத்தை முடிக்கவும், பெரும் நிதி தேவைப்படுகிறது. ஏற்கனவே சுந்தர் சி-க்கு பிசினான்சியல் பிரச்சனைகள் இருப்பதால், அதை பாஜக கட்சியினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

Kushboo join bjp

கடந்த சில மாதங்களாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான போதும் அதை அவர் ஸ்டாரங்காக மறுத்து வந்தார். தான் காங்கிரஸ் கட்சியுடன் தான் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காகவே சமீபத்தில் நடந்த போராட்டத்தில் கூட பங்கேற்று, பாஜகவை கிழித்தெடுத்தார். ஆனால் மற்றொருபுறம் சுந்தர் சி, குஷ்புவை பாஜகவில் இணைக்க திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

kushboo joint bjp

அதற்காக தான் கடந்த மாதம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து குஷ்புவை பாஜகவில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குஷ்பு என்ன தான் பதவி, பணத்திற்கு ஆசைப்படுபவர் என்றாலும், பாஜகவில் இணையும் அளவுக்கு முடிவெடுப்பவர் கிடையாது. அவருடைய அடிப்படை அரசியலே பாஜகவிற்கு எதிரானது தான். இருப்பினும் ஒட்டுமொத்த குடும்பத்தின் பணப்பிரச்சனையை தீர்ப்பதற்காக பாஜகவின் பேரத்திற்கு குஷ்பு ஒப்புக்கொண்டார் எனக்கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக குஷ்பு திமுகவில் இணைந்த போதோ?, காங்கிரஸில் இணைந்தபோதோ? உடன் செல்லாத சுந்தர் சி, இன்று மனைவியுடன் டெல்லி வரை சென்று பாஜக இணைவு விழாவில் பங்கேற்றது அவர் மீதான சந்தேகத்தை உறுதிபடுத்தியுள்ளது.

kushboo joint bjp

மேலும் தமிழகத்தின் அனைத்து ஊடகங்களுக்கும் உற்று நோக்கி குஷ்பு பாஜகவில் இணையும் நிகழ்வு டெல்லியில் மிகப்பெரியதாக வரவேற்கப்படவில்லை. குஷ்புவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய வைக்க வேண்டும் என்பதற்காக சுந்தர் சி, அவரை டெல்லியில் உள்ள இல்லம் வரை சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால் குஷ்புவை பாஜக பெரிதாக கண்டுகொள்ளாததால் தேசிய செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் கட்சி இணைந்துள்ளார். இதனால் முதல் நாளே பெரும் ஏமாற்றத்தை சந்தித்த குஷ்புவிற்கு இனி அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை.


Share this:

Related posts

விவசாயத் திட்டத்தை அடுத்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மோசடி…

MANIMARAN M

‘காவி’ வலை விரிக்கும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யுங்க… முதல்வருக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI

விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவிற்கு கொரோனா… அதிர்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!

AMARA

ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

AMARA

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்… தமிழக அரசுக்கு அதிரடி யோசனை கொடுத்த ராமதாஸ்…!

NEWSKADAI